ஐசிஎம்ஆர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளினால் மக்கள் பெற்ற பயன் என்ன? மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி

சென்னை: இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கோவிட்-19 உள்ளிட்ட பெருந்தொற்று நோய்கள் தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சிகளினால் மக்கள் பெற்ற பயன் என்ன என ஒன்றிய அரசுக்கு டி.ஆர்.பாலு எம்.பி., கேள்வி எழுப்பினார்.

கொரோனா போன்ற பெருந்தொற்று நோய்கள் தொடர்பாக ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இதுவரை செய்துள்ள ஆராய்ச்சிகள் மற்றும் அதற்காக செய்யப்பட்ட செலவு விவரங்கள் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மக்களவையில் திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எழுப்பினார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் ‘ ஐசிஎம்ஆரின் செயல்பாடுகளால் கிடைத்த நிதிப்பலன் மற்றும் சமுதாயப் பொருளாதார பலன்களைப் பொறுத்தவரை, கோவாக்சின் தடுப்பூசியால் பலகோடி இந்திய மக்கள் பயனடைந்து வருவதுடன், ஐசிஎம்ஆர் பெற்று வரும் ராயல்ட்டி, பிளேசிட் சோதனைகள் மூலம் கோவிட் சிகிச்சை செலவுக் குறைப்பு, கோவிட் நோய் தொற்றைக் கண்டறிய உள்நாட்டு பரிசோதனைக் கருவிகள் உருவாக்கப்பட்டதால் கொரோனா நோய் கண்டறியும் ஆர்டிபிசிஆர் சோதனைக் கட்டணம் குறைந்து, அனைத்து தரப்பு மக்களும் இந்த சோதனையை செய்து கொள்ள வழிவகுத்தது. மருந்துகள் மற்றும் சிகிச்சைக்கு தேவையான ஆர்டிபிசிஆர் உள்ளிட்ட கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்க சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, ஆய்வுச் சான்றுகளின் அடிப்படையில் ஐசிஎம்ஆர் வழங்கிய அறிவுரைகளை கொண்ட அறிவிக்கைகள், இந்தியாவில் கொரோனா மருத்துவ சிகிச்சை செலவு சீராக்கப்பட்டது’ என்றார்.

Related Stories: