×

வலிமை படத்துக்கு நள்ளிரவு 1 மணிக்கு முதல் காட்சி

சென்னை: அஜித்தின் வலிமை படத்துக்கு நள்ளிரவு 1 மணிக்கு முதல் காட்சி தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கியுள்ள படம் வலிமை. அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. வழக்கமாக பெரிய ஹீரோக்களின் படங்கள், வெளியாகும் முதல் நாளில் சிறப்பு காட்சி இருக்கும். இந்த காட்சி அதிகாலை 5 மணி முதல் துவங்கும். இம்முறை அஜித்தின் வலிமை படத்துக்கு படக்குழு புதிதாக யோசித்துள்ளது. அதன்படி, படம் வெளியாகும் தினத்தில் நள்ளிரவு 1 மணிக்கு முதல் காட்சியை திரையிட உள்ளனர். சென்னையிலுள்ள சில தியேட்டர்களில் இந்த சிறப்பு காட்சி திரையிடப்படும்.

Tags : First screening at 1 a.m. for the strength film
× RELATED கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110...