×

நாகலாந்து துப்பாக்கி சூடு பற்றி நாடாளுமன்றத்தில் அமித்ஷா கூறியது பொய்: எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பேரணி

கோஹிமா: நாகலாந்தின் மோன் மாவட்டத்தில் கடந்த 4ம் தேதி, தீவிரவாதிகள் என தவறாக நினைத்து பொதுமக்கள் 6 பேரை துணை ராணுவப் படை சுட்டுக் கொன்றது. இந்த சம்பவம் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.  அமித்ஷாவின் விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகலாந்தின் மோன் மாவட்டத்தில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, அமித்ஷாவுக்கு எதிராக கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘‘நாடாளுமன்றத்தில் அமித்ஷா பொய்யான, ஜோடிக்கப்பட்ட தகவல்களை கூறி உள்ளார். எங்களுக்கு தேவை நீதி.  துப்பாக்கி சூடு குறித்து சுதந்திரமான விசாரணை குழு விசாரிக்க வேண்டும், , ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்’’ என்றனர். இந்த பேரணியால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Amit Shah ,Parliament ,Nagaland , Amit Shah lied in Parliament about the Nagaland shootings: People rally to protest
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!