ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் குளித்தபோது வேதபாடசாலை மாணவர்கள் 6 பேர் சுழலில் மூழ்கி பலி: கவர்னர் மற்றும் உள்துறை அமைச்சர் இரங்கல்

திருமலை: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஸ்வேதா சிருங்காசலம் வேத பாட சாலையில் படிக்கும் 9 மாணவர்கள் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) அச்சன்பேட்டை மண்டலம், மடிபாடு பகுதியில் உள்ள கிருஷ்ணா நதியில் குளிக்க சென்றனர். அப்போது நதியில் உள்ள சுழலில் சிக்கி 6 மாணவர்கள் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி 6 மாணவர்களின் சடலத்தை மீட்டனர். இதில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிவசர்மா(14), உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிதீஷ்குமார் தீட்சித்(15), ஹர்ஷித் சுக்லா(15), சுபம் திரிவேதி(17), அனுஷ்மான் சுக்லா(14) மற்றும் கே.சுப்ரமணியம் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த ஆந்திர மாநில கவர்னர் பிஷ்வ பூஷன் ஹரிசந்திரன், மாணவர்கள் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சுச்சரித்தாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: