×

தெற்கு ரயில்வே அறிவிப்பு சென்னை சென்ட்ரல்-லக்னோ ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை சென்ட்ரல்- லக்னோ இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை சென்ட்ரல்- லக்னோ இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் (16093) விரைவு ரயில் வரும் 14, 18, 21 ஆகிய தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டு ஜான்சி, குவாலியர், எட்டாவா, கான்பூர் வழியாக லக்னோ சென்றடையும். அதேபோன்று மறுமார்க்கமாக லக்னோ- சென்னை சென்ட்ரல் இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் விரைவு ரயில் (16094) நாளை, 16, 20 ஆகிய தேதிகளில் கான்பூர், எட்டாவா, ஜான்சி வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Southern Railway ,Chennai Central- ,Lucknow , Southern Railway announces change in Chennai Central-Lucknow train service
× RELATED கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக...