அறநிலையத்துறை செயல்அலுவலர்கள் பணி மாறுதலுக்கு வழிகாட்டி நெறிமுறை: ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டார்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு  அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நிலை 1, 2 மற்றும் 3 செயல் அலுவலர்களை பணியிட மாறுதல் செய்வது மற்றும் விருப்ப மாறுதல் அளித்துள்ள செயல் அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவது குறித்து இணையவழியில் கலந்தாய்வு வரும் 15ம் தேதி நடத்தப்பட உள்ளது.

அதன்படி, இந்த இணையவழி கலந்தாய்வில் கலந்துகொள்ள ஏற்கனவே நிலை 1, 2 மற்றும் 3 செயல் அலுவலர்களாக பணியாற்றுபவர்கள் தற்போதைய பணியிடத்தில் பணியில் சேர்ந்து கட்டாயம் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவை ஆகிய இருபிரிவினருக்கு மட்டும் இதில் விலக்களிக்க பரிசீலிக்கப்படும். தற்போது பணிபுரியும் இடத்தில் 3 ஆண்டுகள் பணி முடித்த  அனைத்து செயல் அலுவலர்களும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.

* ஒரே இணை ஆணையர் பிரிவில் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணிபுரியும் நிலை 1 மற்றும் 2 செயல் அலுவலர்களுக்கு அதே இணை ஆணையர் பிரிவில் பணிமாறுதல் வழங்கப்பட மாட்டாது. ஏற்கனவே பணிபுரிந்த கோயில்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட மாட்டாது.

* கணவன், மனைவி பணியாற்றும் இடத்திற்கு மாறுதல் கோரும்பட்சத்தில் எந்த மாவட்டத்தில் பணியாற்றுகிறாரோ அந்த உதவி ஆணையர் சரகத்திற்கு மட்டுமே நிபந்தனைக்குட்பட்டு கருத்தில் கொள்ளப்படும்.

* ஏற்கனவே நிலை 1, 2 மற்றும் 3 செயல் அலுவலர்களாக பணியாற்றுபவர்கள் வேறு பணியிடம் கோரி அளித்துள்ள விண்ணப்பங்கள் முதுநிலை அடிப்படையிலேயே இணைய வழி கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும்.

Related Stories: