திருவள்ளூர் தெற்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் தெற்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம் மத்திய மாவட்ட செயலாளரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் ஆலோசனையின்பேரில் காக்களூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவரும், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினரும், ஒன்றிய கவுன்சிலருமான த.எத்திராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஜெயபாலன், தொழுவூர் பா.நரேஷ்குமார், பொன். ஜி.விமல்வர்ஷன், ஒன்றிய நிர்வாகிகள் கே.கே.சொக்கலிங்கம், வி.முரளி, மகேஸ்வரி பாலவிநாயகம், அன்பு (எ) ஆல்பர்ட், ஜி.ஏழுமலை, சே.பிரேம்ஆனந்த், ஏ.அபினேஷ், காக்களூர் த.சுகுமார், கிளை  செயலாளர் சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வரும் 14ம் தேதி மகளிருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தரும்

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு  திருவள்ளூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மேளதாளம், பேண்டு வாத்தியம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: