×

சிங்கம்புணரி ஒன்றியத்தில் 1.28 லட்சம் பனை விதைகள் நடும் பணி

சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியம், மல்லாகோட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பனை விதை நடும் பணி நடைற்றது. புது ஊரணி, மூவன் கண்மாய், மலைபுலி கண்மாய், சிந்தாமணி கண்மாய், செங்குளம் கண்மாய்களில் 5 ஆயிரம் பனைவிதை நடவு செய்யும் திட்டத்தை மல்லாகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் விஜயா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, அடிஜிடிகேட்ர் சாந்தாராம் பனைவிதை பதிக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

இதில் சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமணராஜ், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன், ஊராட்சி மன்ற துணை தலைவர் கீதாபிரியா, ஊராட்சி செயலர் ருக்மணி, வருவாய்த்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஒன்றியத்திலுள்ள 30 ஊராட்சிகளிலும் 1 லட்சத்து 28 ஆயிரத்து 500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இளையான்குடி
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி நிலத்தடி நீரை பாதுகாக்கும் பொருட்டு தாயமங்கலம் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் பனைமர விதை நடும்விழா நேற்று நடைபெற்றது. மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் பனை மர விதைகளை நட்டு விழாவை துவக்கி வைத்தார். இதில் பேராசிரியர் திருமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ சுப.மதியரசன், ஆணையாளர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, கூட்டுறவு கடன் சங்க தலைவர் தமிழரசன், ஊராட்சி மன்ற தலைவர் மலைராஜ், தகவல் தொழில்நுட்ப அணி கண்ணன், அழகேசன், பொறியாளர் அணி அஜித் பிரபு, கோபி, சசி பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Singampunari Union , Planting of 1.28 lakh palm seeds in Singampunari Union
× RELATED சிங்கம்புணரி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் ஆய்வு