×

குற்றாலம் கோயிலில் திருவாதிரை திருவிழா; கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்: 20ம்தேதி ஆரூத்ரா தரிசனம்

தென்காசி: குற்றாலம் திருக்குற்றால நாதசுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 15ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. குற்றாலம் குற்றாலநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா நடத்துவது. வழக்கம் இந்த ஆண்டு திருவிழா இன்று காலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.  ஜெயமணி சுந்தரம் பட்டர், கணேசன் பட்டர், பிச்சுமணி என்ற  கண்ணன் பட்டர், மகேஷ் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கொடிபட்டம் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. சிவனடியார்களின் சிவ பூத வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கண்ணதாசன், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையாபாண்டியன், குற்றாலம் இசக்கிபாண்டியன், சர்வோதய கண்ணன், வர்த்தக சங்க நிர்வாகிகள் காவையா, அம்பலவாணன், வேல்ராஜ், முருகன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் நடராஜன், பரமசிவன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 விழாவில் 15ம் தேதி காலை 9 மணிக்கு மேல் ஐந்து தேர்கள் ஓடும் தேரோட்டம் நடக்கிறது. முதலில் விநாயகர், முருகர், நடராஜர், குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்மன் ஆகிய தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இழுக்கப்படுகிறது. 18ம்தேதி காலை 10 மணிக்கு மேல் சித்திர சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 20ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் சித்திர சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5 மணிக்கு மேல் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது.

மேலும் திருவிழா நாட்களில் தினமும் காலை 9.30 மணிக்கு மேலும், இரவு 7 மணிக்கு மேலும்  நடராஜ பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறும். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர்கள் சங்கர், கண்ணதாசன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Tags : Thiruvathirai Festival ,Courtallam Temple ,Arutra ,Darshan , Thiruvathirai Festival at Courtallam Temple; Starting today with flag hoisting: Arutra Darshan on the 20th
× RELATED ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது...