×

கரூர் எல்விபி நகர் பகுதியில் தேங்கி இருக்கும் மழை நீரால் மக்கள் அவதி

கரூர் : கரூர் மாநகராட்சிக்குட்பட்ட எல்விபி நகர்ப்பகுதிகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பரவலாக தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது. மாநகராட்சி சார்பில் தண்ணீரை அகற்றும் பணியை பணியாளர்கள் மூலம் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட எல்விபி நகரையொட்டியுள்ள பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீர் வெளியேறும் வகையில் இந்த பகுதியில் வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், கொசுத்தொல்லை உட்பட பல்வேறு தொந்தரவுகளுக்கு பகுதியினர் ஆளாகி வருகின்றனர். எனவே, இதனை அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எல்விபி நகரின் அருகில் உள்ள தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : Karur LVP Nagar , Karur: The LVP under the Karur Corporation has been asked to carry out drainage works in the urban areas.
× RELATED கரூர் எல்விபி நகர் பகுதியில் தேங்கி இருக்கும் மழை நீரால் மக்கள் அவதி