×

உடுமலை அருகே கரடி தாக்கி 2 பேர் காயம்-தேன் எடுக்க சென்றபோது நேர்ந்த சோகம்

உடுமலை :  உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட உடுமலை, அமராவதி, கொழுமம் வனச்சரகங்கள் உள்ளது. இங்கு யானை, மான், காட்டுமாடு, கரடி, சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. மேலும் இங்குள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் ஆட்டு மலை, மாவடப்பு, ஈசல் திட்டு உள்ளிட்ட 18 மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களின் முக்கிய தொழிலாக தேனெடுத்தல், தைலம் காய்ச்சுதல் மற்றும் விவசாயம் உள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் திருமூர்த்திமலை அருகில் உள்ள ஈசல் திட்டு மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த 5 பேர் தேன் எடுப்பதற்காக அருகிலுள்ள மேய்ச்சல் கரடு பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக புதர் மறைவில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று இவர்களை துரத்தத் தொடங்கியது. அனைவரும் கரடியிடமிருந்து தப்பி ஓடினர். அப்போது ஈசல் திட்டு பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரது மகன்களான செந்தில் மற்றும் மகேஷ் ஆகியோரை கரடி தாக்கியது.

இதில் அவர்களுக்கு கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது.அதற்குள் மற்றவர்கள் கூச்சலிட்டு கரடியை அங்கிருந்து விரட்டினர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக ஜல்லிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரடி தாக்கியதால் தேன் எடுக்கச் சென்ற மழைவாழ் மக்கள் காயமடைந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Udumalai , Udumalai: Udumalai, Amravati, Colombo under the Anaimalai Tiger Reserve in the Western Ghats next to Udumalai
× RELATED வண்ண ஓவியங்களால் ஜொலிக்கும் உடுமலை மத்திய பேருந்து நிலையம்