×

இன்று உலக மலை தினம் நீலகிரி மலை குறித்து விழிப்புணர்வு-சுற்றுசூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ஊட்டி :  உலக மலை தினம் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், புகழ்பெற்ற நீலகிரி மலைகளின் சிறப்புகள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும் மலைகள், மலைத்தொடர்களை சிறப்பிக்கும் வகையில் கடந்த 2003ம் ஆண்டு யுனஸ்கோ டிசம்பர் 11ம் தேதியை சர்வதேச மலை தினமாக அறிவித்தது.

2004 முதல் இயற்கை எழில் சூழ்ந்த மலை பிரதேசங்களில் மலைகளின் முக்கியத்துவம், மலைகளினால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் பாதுகாப்புகள், அவற்றின் முக்கியத்துவம், மலை வாழ் மக்களின் பாரம்பரியம் போன்றவைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. நீலகிாி மாவட்டத்தில் ஏராளமான மலைகள் உள்ளன. 2637 மீட்டர் உயரமுள்ள தொட்டபெட்டா மலைச்சிகரம், கொலாிபெட்டா மலை, முக்குருத்தி மலை, நீலகிாி மலை, ரங்கசாமி மலை, கெத்தை மலைத்தொடர், கோடநாடு மலை, கூடலூர் ஊசிமலை, தவளைமலை போன்றவை குறிப்பிட்டு சொல்ல கூடிய மலைகளாக விளங்கி வருகிறது.

நீலகிாி மலைதொடர்களுக்கு நடுவே காவிரியின் மிக முக்கிய கிளை ஆறாக விளங்கும் பவானி, குந்தா மற்றும் மாயார் ஆகிய ஆறுகள் உற்பத்தியாகின்றன. இங்கு உற்பத்தியாகும் ஆறுகளுக்கு நடுவே அணைகள் கட்டி நீர் மின் உற்பத்தி செய்வதன் மூலம் 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மலை மாவட்டமான நீலகிாியின் பிரதான தொழிலாக தேயிலை விளங்கி வருகிறது.

மேலும் கடந்த 200 ஆண்டுகளாக மலை காய்கறிகள் பயிாிடப்பட்டு வருகின்றன. உலக புகழ்பெற்ற மலைவாச ஸ்தலமாக விளங்கி வரும் நீலகிாிக்கு ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனிடையே பல்வேறு மலை தொடர்களை தன்னகத்தே கொண்டு, மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றாக அமைந்து பரந்து விரிந்து மலைகளின் அரசியாக திகழும் நீலகிரி மாவட்டத்தில் மலைகளை பாதுகாக்கும் பொருட்டும், அவற்றின் சிறப்புகள் குறித்து தெரிவிக்கவும் உாிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுற்றுசூழல் ஆர்வலர் சிவதாஸ் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மலைவாச ஸ்தங்களில் ஒன்றாக நீலகிரி உள்ளது. பல்லுயிர் பெருக்கத்திற்கும் முக்கிய பங்காற்றி வருகிறதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் தொிவிக்கின்றனர்.உலகில் உள்ள 400 இயற்கை அதிசயங்களில் நீலகிரியும் ஒன்று என புவியியலாளா்கள் தொிவிக்கின்றனர். நீலகிாியில் உள்ள மலைகளில் சிறப்பு வாய்ந்த மலைகளாக தொட்டபெட்டா மலைச்சிகரம், முக்குருத்தி மலை உள்ளிட்ட பல்வேறு மலைகள் உள்ளன. இங்குள்ள மலை தொடர்களில் இருந்து முக்கிய ஆறுகள் உற்பத்தியாகின்றன.
நீலகிரியில் உள்ள மலைகளின் சிறப்புகள் குறித்து சுற்றுலா மாவட்டமான நீலகிாிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு மலை தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டியது அவசியம், என்றார்.



Tags : World Mountain Day ,Nilgiris , Ooty: As World Mountain Day is being celebrated today, tourists should be treated to the specialties of the famous Nilgiris.
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்