தமிழகத்தில் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 31ஆம் தேதிக்குள் சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் ஆட்சியர்கள் என அனைவரும் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 1968 இந்திய ஆட்சி பணியாளர்கள் சட்டத்தின் அடிப்படையில் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது வழக்கமான நடைமுறை தான் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை 400க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் அனைவர்க்கும் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. சரியான காரணங்கள் இன்றி சொத்து விவரங்கள் தெரிவிக்காமல் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஜனவரி 31ஆம் தேதிக்குள் சொத்து விவரங்களை ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களின் பெயரிலும், தங்கள் குடும்பத்தினர் பெயரிலும் உள்ள அசையாத மற்றும் மற்ற சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: