ஆப்கானில் இருந்து 110 இந்துக்கள் நாடு திரும்பினர்

டெல்லி:  ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைத்துள்ளதை அடுத்து ஒன்றிய அரசானது ஆபரேஷன் தேவி சக்தி என்ற பெயரில் ஆப்கானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. நேற்று 110  பேர் காபூலில் இருந்து இந்தியா திரும்பினார்கள். சிறப்பு விமானத்தில் அழைத்துவரப்பட்ட இவர்கள் நேற்று காலை டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்த விமானத்தில் ஆப்கானில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க 3 குருத்வாராக்களில் இருந்து குரு கிராந்த் சாகிப் புனித நூல் மற்றும் காபூலில் இருக்கும் 5ம் நூற்றாண்டை சேர்ந்த அசமாய் கோயிலில் இருந்து ராமாயணம், மகாபாரதம் மற்றும் பகவத் கீதை உள்ளிட்ட இந்து மத நூல்களும் சிறப்பு விமானத்தில் கொண்டு வரப்பட்டன.

Related Stories: