×

கோயில் கும்பாபிஷேக விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வெங்கத்தூரில் துலுக்காணத்தம்மன் கோயில் உள்ளது. இதற்கிடையே அக்கோயிலுக்கு அழகிய மண்டபம் மற்றும் வர்ணம் பூசப்பட்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதற்கு முன்னதாக இரண்டாம், மூன்றாம் காலபூஜை, சாமதேவ சமர்ப்பணம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 4ம் கால பூஜை, வேதமந்திர ஹோமம், மஹாபூர்ணாஹூதி, ஆலய ப்ரதசனம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு வந்து கோயில் கலசத்தில் அர்ச்சகர்கள் ஊற்றி குடமுழுக்கு செய்தனர். அதைத் தொடர்ந்த அந்த புனித நீர் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது.

மஹா அபிஷேகம், உபசாரம் தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வெங்கத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Temple Kumbabhishek Festival , Temple Kumbabhishek Festival
× RELATED கோயில் கும்பாபிஷேக விழா