×

பீகாரில் நலத்திட்டங்களில் முறைகேடு: 200 அரசு அதிகாரிகள் இடமாற்றம், ஊதிய உயர்வு ‘கட்’

பாட்னா:  பீகார் மாநிலத்தில் அரசு நலத்திட்டங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 200 அதிகாரிகளுக்கு டிரான்ஸ்பர் வழங்கியும், ஊதிய உயர்வை நிறுத்தி வைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஸ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் கிராம வளர்ச்சி துறை அமைச்சர் ஸ்ரவன் குமார் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ தகுதியற்றவர்களின் பெயரை பதிவு செய்தது மற்றும் பிரதமரின் யோவாஸ் ஆஜனா திட்டத்தின் கீழ் போலி பயனாளிகளின் பெயர்களில் கோடிக்கணக்கான ரூபாயை மாற்றியது, குடிநீர் குழாய் இணைப்பு திட்டத்தில் முறைகேடு என கடந்த சில ஆண்டுகளாக முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

மூத்த அதிகாரிகள் விசாரணையை இறுதி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பீகார் அரசில் முறைகேடுக்கு இடம் இல்லை.  அரசின் நலத்திட்டங்களில் மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பணிமாறுதல் வழங்கியும், ஊதிய உயர்வை நிறுத்தியும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Bihar , Bihar, abuse, government officials, relocation
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!