மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக் கழக தேடுதல்  குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு: மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் புதிய துணை வேந்தரை தேர்வு செய்வதற்காக தமிழக உயர்கல்வித்துறையின் மூலம் கடந்த அக்டோபர் 26ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் பேரில் டெல்லி, யுபிஎஸ்சி முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் பாலகுருசாமி தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய துணை வேந்தர் பதவியில் சேர விரும்பும் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தேடுதல் குழு அறிவித்துள்ளது.  

இதற்கான விண்ணப்பங்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழக இணைய  தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதிலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்புவதன் மூலம், அதன் நகலை தபால் மூலம் டிசம்பர் 27ம் தேதிக்குள், பேராசிரியர் ஜெ.பிரகாஷ், செயல் அலுவலர், மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணை வேந்தர் தேடுதல் குழு, கருவிகள் பொறியியல் துறை, அண்ணா பல்கலைக் கழக எம்ஐடி  வளாகம், குரோம்பேட்டை, சென்னை-44 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான மின்னஞ்சல் முகவரி, mkuvcsc@gmail.com. விண்ணப்பங்களை அனுப்பிக்கலாம்.

Related Stories: