×

பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களை கொண்டு அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடவேண்டும்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட வேண்டும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தமிழ் வளர்ச்சி துறை செயலாளர்மகேசன் காசிராஜன் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது:சமீபகாலமாக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுவதாகவும் இதனால் விழாவில் பங்கேற்போர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது உதட்டளவில் கூட பாடுவதில்லை. மேலும், எந்த வித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல் இயந்திரகதியில் எழுந்து நிற்பதாகவும், எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படுகிறதோ அந்த நோக்கம் சிதைந்து போவதாக அறியப்படுகிறது.

எனவே, இனிவரும் காலங்களில் பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்திற்கு பதிலாக விழாவை நடத்துவோர் இதற்கென பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் பாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.




Tags : Government ,Tamil Nadu , Replace recorded equipment At the state ceremony with trainees Tamiltai greetings, national anthem should be sung: Government of Tamil Nadu order
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...