×

தமிழ்நாட்டில் அரசு விழாக்களில் கருவிகள் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைப்பதை தவிர்க்க வேண்டும்: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் அரசு விழாக்களில் கருவிகள் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைப்பதை தவிர்க்க வேண்டும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அறிவுறுத்தியுள்ளது. விழா நடத்துவோர் பயிற்சி பெற்றவர்களை ஏற்பாடு செய்து அவர்கள் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்க வழிவகை செய்ய அறிவுறுத்தியுள்ளது.

கருவிகளில் இசைக்கப்படுவதால் விழாவில் பங்கேற்போர் உதட்டளவில் கூட தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில்லை, எனவும் தேசப்பற்றோ, தமிழ் உணர்வோ இல்லாமல் எந்திரகதியில் எழுந்து நிற்பதாகவும் கருத்துக்கள் நிலவுகிறது என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை கூறியுள்ளது.

எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் இசைக்கப்படுகிறதோ அந்த நோக்கம் சிதைந்து போகிறது என தமிழ் வளர்ச்சி தெரிவித்துள்ளது. இதனால் இனிவரும் காலங்களில், பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்திற்கு பதிலாக விழாவை நடத்துவோர் இதற்கென பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை பாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Tamiltai ,Tamil Nadu , Government Festival, Tamil Thai Greetings, National Anthem, Tamil Development and News
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...