டெல்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத்தின் உடல்கள் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 17 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பிபின் ராவத், மதுலிகா ராவத் உடல்களுக்கு அவர்களது குடும்பத்தார் இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் உடல்களுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இறுதி அஞ்சலி செலுத்தினார்.