வருகிற 13 முதல் 23ம் தேதி வரை அதிமுக உட்கட்சி தேர்தல்: மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தல் வருகிற 13ம் தேதி முதல் 23ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடந்த 6ம் தேதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்ட கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான கழக அமைப்பு தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக வருகிற 13ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி, விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கரூர், நீலகிரி, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், விழுப்புரம், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, காஞ்சிபுரம், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் வக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் மேற்கு, செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு ஆகிய 35 மாவட்டங்களுக்கு வருகிற 13 மற்றும் 14ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிமுக கட்சி தலைமை அறிவித்துள்ளது. பொறுப்பாளர்கள் விவரம் வருமாறு:

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்: கடம்பூர் ராஜு (முன்னாள் அமைச்சர்), பி.சின்னப்பன் (இலக்கிய அணி இணை செயலாளர், எம்.தெய்வேந்திரன் (அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்)

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்: எஸ்.பி.சண்முகநாதன் (முன்னாள் அமைச்சர்), என்.சின்னத்துரை (அதிமுக அமைப்பு செயலாளர்)

தென்காசி வடக்கு மாவட்டம்: சி.த.செல்லப்பாண்டியன் (முன்னாள் அமைச்சர்), பி.ஆர்.செந்தில்நாதன் (சிவகங்கை மாவட்ட செயலாளர்)

தென்காசி தெற்கு மாவட்டம்: கீர்த்தினா முனியசாமி (மகளிர் அணி இணை செயலாளர்), எம்.கண்கண்டன் (முன்னாள் அமைச்சர்), என்.சதன்பிரபாகர் (ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்), எஸ்.முத்தையா (எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்), எம்.ஏ.முனியசாமி (ராமநாதபுரம் மாவட்ட செயலாளர்)

விருதுநகர் கிழக்கு மாவட்டம்: பி.கே.வைரமுத்து (புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர்), எம்.ராஜநாயகம் (புதுக்கோட்டை தெற்கு மாவட்ட துணை செயலாளர்), ஏ.அம்பி (புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொருளாளர்)

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம்: திண்டுக்கல் சீனிவாசன் (முன்னாள் அமைச்சர்),  வி.மருதராஜ் (அமைப்பு செயலாளர்), வி.பி.பி.பரமசிவம் (இளைஞர் பாசறை செயலாளர்)

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்: டி.ரத்தினவேல் (அமைப்பு செயலாளர்), வெல்லமண்டி என்.நடராஜன் (முன்னாள் அமைச்சர்)

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்: த.வேலழகன் (வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர்), டி.ஆர்.முரளி (எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர்)

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்: எஸ்.ஆர்.கே.அப்பு (வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர்), எம்.டி.பாபு (மாணவர் அணி துணை செயலாளர்)

காஞ்சிபுரம் மாவட்டம்: டி.ஜெயக்குமார் (முன்னாள் அமைச்சர்), எ1்.ஆர்.விஜயகுமார் (மாணவர் அணி செயலாளர்)

பெரம்பலூர் மாவட்டம்: எம்.ஜி.எம்.சுப்ரமணியன் (தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர்)

அரியலூர் மாவட்டம்: எஸ்.வி.திருஞானசம்பந்தம் (தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர்)

மதுரை மாநகர் மாவட்டம்: எஸ்.வளர்மதி (முன்னாள் அமைச்சர்), ப.குமார் (திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்)

சேலம் புறநகர் மாவட்டம்: உடுமலை ராதாகிருஷ்ணன் (முன்னாள் அமைச்சர்), சி.மகேந்திரன் (திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்)

சேலம் மாநகர் மாவட்டம்: பொள்ளாச்சி ஜெயராமன் (முன்னாள் அமைச்சர்), எம்.எஸ்.எம்.ஆனந்தன் (முன்னாள் அமைச்சர்), திருப்பூர் சி.சிவசாமி (அமைப்பு செயலாளர்) இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: