இந்திய வீரர்கள் தங்க நட்சத்திர ஹோட்டல் முழுவதும் புக்கிங்

தென்ஆப்ரிக்க தொடருக்கான இந்திய அணி வரும் 16ம் தேதி புறப்பட்டு 17ம் தேதி செஞ்சூரியன் செல்ல உள்ளது. முதல் டெஸ்ட் 26ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன் இந்திய அணியினர் ஒருவாரம் தனிமைப்படுத்தப்படுவர். அதற்காக செஞ்சூரியனின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஐரீன் கன்ட்ரி லாட்ஜ் அறைகள் முழுவதும் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டல் ஏற்கெனவே பயோபபில் லாக்டவுனில் உள்ளது. ஹோட்டலில் வெளி விருந்தினர் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட ஊழியர்கள் ஏற்கனவே ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஊழியர்களுக்கு வழக்கமான சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: