×

சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு..!!

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்த சாரதி சுவாமி திருக்கோயிலில்  மாற்றுத் திறனாளிகளுக்கு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருக்கோயில்களில் திருமணம் செய்திட கட்டணமில்லா திருமணத் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் டிசம்பர் 8ம் தேதி தொடங்கி வைத்து மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்களுடன் பரிசு பொருட்களை வழங்கிச் சிறப்பித்தார்கள்.

இந்த அறிவிப்பினை நிறைவேற்றும் விதமாக சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் மாற்று திறனாளி திருமணத்திற்கு மணமகன் எஸ்.சுரேஷ்குமார் மற்றும் மணமகள் எஸ். மோனிஷா ஆகியோர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இத்திட்டத்தை தொடங்கி வைத்ததன் மூலம் இனிவரும் காலங்களில் திருமணம் நடத்தவிருக்கும் மாற்றுத்திறனாளிக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் மற்றும் திருமண மண்டபங்களிலும் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Charity ,Minister ,Sekarbapu ,Sarathi Temple ,Tiruvallikeni, Chennai , Driver's temple seen in Tiruvallikeni, alternatively abled, married, Sekarbapu
× RELATED தீ தொண்டு நாள் வார விழா