×

'நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்வீர்கள்'அகமதாபாத் மாநகராட்சிக்கு குஜராத் ஐகோர்ட் கண்டனம்

அகமதாபாத்: அகமதாபாத்தில் அசைவ உணவு விற்பனை செய்த சாலையோர கடைகளின் தள்ளுவண்டிகளை பறிமுதல் செய்த மாநகராட்சிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கவுன்சிலர்கள் சிலரின் ஆட்சேபத்தால் அசைவ உணவு விற்பனை செய்த தள்ளுவண்டிகளை மாநகராட்சி பறிமுதல் செய்தது.

தள்ளுவண்டி பறிமுதல் செய்யப்பட்டதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் சாலையோர கடை வியாபாரிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்வீர்கள் என அகமதாபாத் மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும் வியாபாரிகள் தள்ளுவண்டி கடைகளை விடுவிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்க மாநகராட்சிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Gujarat iCourt ,Ahmedabad , Ahmedabad Corporation, Gujarat high court, condemned
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி