×

ஐஎஸ்எல் கால்பந்து: ஒடிசா-கவுகாத்தி இன்று மோதல்

கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 8வது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 23வது லீக் போட்டியில் மும்பை சிட்டி எப்சி- ஜாம்ஷெட்பூர் எப்சி அணிகள் மோதின. இதில் ஆதிக்கம் செலுத்திய மும்பை அணியில் 3வது நிமிடத்தில் ஹசிங்கோ, 17வது நிமிடத்தில் பிபின்சிங், 24வது நிமிடத்தில் இகோர் அன்குளோ கோல் அடிக்க முதல் பாதியில் 3-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் ஜாம்ஷெட்பூர் வீரர் கோமல் தட்டால் 48வது நிமிடத்தில் ஏலி சபியா 55வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

70வது நிமிடத்தில் மும்பையின் யகோர் கட்டாடா கோல் அடித்தார். முடிவில் 4-2 என்ற கோல்கணக்கில் மும்பை வெற்றி பெற்றது. 5வது போட்டியில் 4வது வெற்றியுடன் மும்பை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஜாம்ஷெட்பூர் 5வது போட்டியில் முதல் தோல்வியை சந்தித்தது. 2 வெற்றி, 2 டிரா என 2வது இடத்தில் உள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு ஒடிசா எப்சி-கவுகாத்தி எப்சி அணிகள் மோதுகின்றன.


Tags : ISL FOOTBALL ,Odysa ,Gavakati , ISL Football: Odisha-Guwahati clash today
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: கோவா-மும்பை இன்று அரையிறுதியில் மோதல்