×

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக வதந்தி, பொய் தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை

சென்னை: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்களை சிலர் பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போலீசார் தெரிவித்துள்ளனர். வதந்திகளை பரப்புவோர் யார் என்பதை சைபர் க்ரைம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்” என காவல்துறை எச்சரித்துள்ளது.

முன்னதாக விமானப்படை தரப்பில், இறந்தவர்களின் கன்னியம் காக்க, விபத்து தொடர்பான யூகங்கள் பரப்புவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் உண்மை வெளிவரும்” என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில்
சர்ச்சை கருத்து பதிவிட்ட குமாரி மாவட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட ஷிபிந்த்(24) மீது சைபர் குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே மதுரை கடச்சனேந்தல் குடிநீர் வடிகால் வாரியம் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் யூடியூபர் மாரிதாஸ்.என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் யூடியூபர் மாரிதாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Tags : Gunnaur , Coonoor, Army helicopter crash, rumor, stern action, police alert
× RELATED குன்னூர் அருகே பந்துமை ஏரி பகுதியில்...