×

முத்துப்பேட்டை திமிலத்தெருவில் சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீர்-மக்கள் கடும் அவதி

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட திமிலத்தெரு பகுதியில் கடந்த 10ஆண்டுகளாக அப்பகுதியில் சாலை வசதி மற்றும் கழிவுநீர் வடிகால் வசதிகள் என அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள பிஆர்எம் கொல்லை குடியிருப்பு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்லும் சாலையில் இதுநாள்வரை சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்கவில்லை. அதேபோல் வடிகால் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கவில்லை.

இதனால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து செல்கிறது. மழைக்காலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கிவிடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிகக்குள்ளாகி வருகின்றனர். தற்பொழுது இப்பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் இந்த சாலையில் செப்டிக் டேங்க் கழிவுகளுடன் கழிவு நீர் தேங்கி அசுத்தமாக காட்சியளிக்கிறது.

மேலும் இதன் மூலம் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்களையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே இப்பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை வெளியேற்றி தருவதுடன் கழிவுநீர் சாலையில் தேங்காமல் நிரந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் சாலை நடுவில் செப்டி டேங் அமைத்துள்ளதை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Muthupet, Tamil Nadu , Muthupet: Thiruvarur District, Muthupet Municipality Tamil Nadu Road in the area for the last 10 years
× RELATED மணிமுத்தாறு அருவியில் நாளை முதல்...