மணப்பாறை அருகே அரசுப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு! லெமன் ரைஸை டேஸ்ட் செய்து தரம் பார்த்தார்!

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு திடீரென சென்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வகுப்பறைக்குள் சென்று மாணவர்களிடம் பேசினார். கல்வி தரம், ஆங்கில கல்வி குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்த அவர், பள்ளியில் தேவையான வசதிகள் உள்ளதா என தலைமை ஆசிரியரிடம் கேட்டார். அப்போது ஸ்மார்ட் வகுப்பறைகள்  வேண்டுமென தலைமை ஆசிரியர் கோரிக்கை வைத்தார்.

அதனைத்தொடர்ந்து சத்துணவு கூடத்திற்கு வந்த அமைச்சர் அங்கு தயார் செய்யப்பட்டிருந்த எலுமிச்சை சாதத்தை ருசித்துப் பார்த்து, சாதத்தின் தரம் குறித்தும், சாதத்திற்கு குழந்தைகளுக்கு துணையாக வழங்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்தும் கேட்டறிந்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சரின் திடீர் ஆய்வு அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இது போன்று அரசு பள்ளிகளில் அவ்வப்போது தொடர்ந்து அமைச்சர் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென மக்கள் வலியுறுத்தினர்.

Related Stories: