×

உருமாறிய ஓமிக்ரான் கொரோனா பரவல், டெல்டா, டெல்டா ப்ளஸ் வைரஸ்களை விட இரட்டிப்பாக இருக்கும் : வல்லுநர்கள் தகவல்!!

ஜெனீவா : உருமாறிய ஓமிக்ரான் கொரோனா பரவல் டெல்டா வைரஸ் மற்றும் டெல்டா ப்ளஸ் வைரஸ்களை விட இரட்டிப்பாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வைரஸ்களின் உருமாற்றம் இயல்பானதாக கருதப்பட்டாலும் உருமாற்றம் அடைந்து வரும் கொரோனா தொற்றுகளை தடுப்பூசிகள் எதிர்கொள்ளுமா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் மருத்துவ வல்லுநர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது அச்சுறுத்தி வரும் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸுகளை காட்டிலும் பரவல் விகிதம் விரைவாக இரட்டிப்பாகும் என மருத்துவ லான்செட் ஆய்வு இதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.

பீட்டா வகை பாதிப்பு 7 நாட்களில் இரட்டிப்பான சூழலில் டெல்டா வகை பாதிப்புகள் 5 நாட்களில் இரட்டிப்பானதாகவும் தற்போது ஓமிக்ரான் வகை பாதிப்புகள் 2 நாட்களுக்குள் இரட்டிபாவதாகவும் மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர். இருப்பினும் அதிக நோய் பாதிப்பு தீவிரமாக உள்ள 11 நாடுகளின் தரவுகள் படி, 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தால் பாதிப்பு மற்றும் பரவும் விகிதம் குறைவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.ஓமிக்ரான் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பின் தீவிரம் எப்படி இருக்கும் என்பது தற்போது வரை உறுதியாகாத சூழலில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்வது, முகக்கவசம் அணிவது உட்பட பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பது மிக அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


Tags : Delta ,Delta Plus , டெல்டா ப்ளஸ்
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!