×

ஆர்டிபிசிஆர் சோதனை முடிவு 3 மணி நேரமாக குறைப்பு: விமான நிலைய இயக்குனர் பேட்டி

சென்னை: சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் அளித்த பேட்டி: ஒமிக்ரான் பாதித்த நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணியருக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி ரேபிட் சோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.3400லிருந்து ரூ.2,900 குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஆர்டிபிஆர் சோதனை கட்டணம் ரூ.600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ரேபிட் சோதனை முடிவுகள் வெளியிடும் நேரம் ஒரு மணி நேரத்திலிருந்து 30 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் சோதனை நேர முடிவுகள் வெளியிடும் நேரம் 3 மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து ஒமிக்ரான் பாதித்த நாடுகளிலிருந்து வரும் பயணியருக்கு சோதனை கட்டாயம் என்ற பட்டியலிலிருந்து சிங்கப்பூர் நாடு நீக்கப்பட்டு, தான்சானியா நாடு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒமிக்ரான் பாதிப்பு பட்டியலில் உள்ள நாடுகள் விவரம்: இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, கானா, மொரீசியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, தான்சானியா, ஹாங்காங், இஸ்ரேல்.

Tags : Reduction of RTPCR test results to 3 hours: Interview with Airport Director
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...