×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு வார்டு, வாக்குச்சாவடியை தெரிந்துகொள்ள சிறப்பு வசதி: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெயர் எந்த வார்டு, எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை இணையதளத்தில் பார்க்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: இந்திய தேர்தல் ஆணையம் தயாரித்து வெளியிட்டுள்ள 1.11.2021 அன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கான வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல், 2021 தயாரிக்கப்பட்டு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் பதிவு அலுவலரால் வெளியிட மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுவாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

வார்டுவாரியான வாக்காளர் பட்டியல்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளமான ‘tnsec.tn.nic.in’ல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களின் பெயர், எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்தும் விவரங்களை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் முதலில் அவர்கள் தொடர்புடைய சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்களை சேர்க்க வேண்டும். அதற்கு அவர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடம் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் முதலில் தங்களுக்கு தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில்  பெயர்களை சேர்க்க வேண்டும்.

Tags : State Election Commission , Urban Local Election Voter List Release Ward, Special Facility to Know Polling: State Election Commission Announcement
× RELATED இந்தியாவிலேயே அதிகம் கேரளாவில் தான் இளம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு