7வது குழந்தைக்கு தந்தையானார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ்

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் மூன்றாவது மனைவிக்கு இரண்டாவதாக அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது மூன்றாவது மனைவி கேரிக்கு லண்டன் மருத்துவமனையில் இரண்டாவதாக அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவரின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை, ‘லண்டன் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதை அறிவிப்பத்தில் பிரதமரும், அவரது மனைவியும் மகிழ்ச்சி அடைகின்றனர்.  தாயும், சேயும் நலமாக இருக்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் போரிசுக்கு பிறந்துள்ளது ஏழாவது குழந்தையாகும். பிரதமரது முதல் மனைவி அல்ஜீராவிற்கு குழந்தைகள் கிடையாது. பிரதமர் போரிஸ், தனது கலை ஆலோசகர் ஹெலன் மெகிண்டருடான உறவின் காரணமாக கடந்த 2009ம் ஆண்டு  ஒரு குழந்தை பிறந்தது. அதன் பின் இந்திய வம்சாவளியை சேர்ந்த மரினா வீலர் என்பவரை போரிஸ் ஜான்சன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். அவரை விவாகரத்து செய்த பின் கேரியை பிரதமர் மூன்றாவதாக திருமணம்  செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: