×

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி.!

டெல்லி: முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் ஆகிய 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட், பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 13 பேரின் உடல்கள் கோவையில் இருந்து இன்று மாலை டெல்லி கொண்டு செல்லப்பட்டது. டெல்லியில் உள்ள பாலம் விமானப்படை விமான நிலையத்தில் 13 பேரின் உடல்களும் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டன.

உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு அவர்களது உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், விமானப்படை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடியை தொடர்ந்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அஞ்சலி செலுத்தினார். மேலும், முப்படைகளின் தளபதிகளும் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags : Modi ,Minister ,Rajnath Singh ,Commander of the Thirties ,Bibin Rahad , Prime Minister Modi and Minister Rajnath Singh paid tributes to the bodies of 13 people, including Commander of the three forces Pipin Rawat.
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...