×

வேப்பந்தட்டை தாலுகா மலையாளப்பட்டியில் கல்லாற்றை கடந்து செல்ல தற்காலிக தொங்குபாலம்: ஆபத்தை உணராமல் பயணிக்கும் மக்கள்

பெரம்பலூர்: வேப்பந்தட்டை தாலுகா மலையாளப்பட்டியில் கல்லாற்றின் குறுக்கே ஆற்றைக் கடக்க மூங்கில் மரகட்டைகளால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகத் தொங்குபாலத்தில் பொதுமக்கள், விவசாயிகள் ஆபத்தை உணராமல் சென்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா மலையாளப்பட்டி அருகே பச்சைமலையில் உற்பத் தியாகி வரும் கல்லாறு, சின்னமுட்லு, மலையாளப்பட்டி, கொட்டாரகுன்று, அ. மேட்டூர் வழியாக தொடர்ந்து பயணிக்கிறது. இதில் மலையாளப்பட்டி ஊராட்சி தும்பபெருமாள் கோவில் பகுதியில் ஆங்காங்கே காட்டுக் கொட்டகையில் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வணிக, மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள கல்லாற்றை கடந்துதான் தென்புறம் உள்ள மலையாளபட்டிக்கு வந்து செல்ல வேண்டும். அதேபோல் மலையாளப்பட்டி ஊரை சேர்ந்த 40க்கு மேற்பட்டோர் இந்த கல்லாற்றைக் கடந்துதான் தும்பபெருமாள் கோவில் அருகே உள்ள தங்களது விளைநிலங்களுக்கு செல்லவேண்டும்.

இந்த கல்லாற்றின் குறுக்கே மலையாளபட்டிக்கும், கொட்டாரகுன்றுக்கும் இடையே ஒரு உயர்மட்ட மேம்பாலம் கடந்த 2014ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. ஆனால் தும்பப் பெருமாள் கோவில் பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த மேம்பாலத்தை பயன்படுத்துவதில்லை. மழை இல்லாத காலங்களிலும், ஆற்றில் குறைவாக தண்ணீர் செல்லும்போதும் கல்லாற்றின் குறுக்கே இறங்கி ஆற்றை கடந்து மலையாளப்பட்டிக்கு சீக்கிரம் வந்து செல்வார்கள். இந்தக் கல்லாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது இருபுறமும் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆற்றைக் கடந்துசெல்ல முடியாமல் அவதிப்படுவது வழக்கம். காரணம் கணக்கற்ற முறையில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மழைநீர் காட்டாறாக கரைபுரண்டு செல்வதால் தற்போது இவர்கள் பயன்படுத்தும் பகுதியில் தரைப் பாலமும் புதிய மேம் பாலமும் அமைப்பது சிரம மான ஒன்றாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக் கு ஏற்பட்ட போதிலும் தும்பபெருமாள் கோவில் பகுதி பொதுமக்கள் தங்கள்பகுதியில் இருந்து மலையாளப் பட்டி செல்வதற்கு, அருகே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேம்பாலத்தை பயன்படுத்தாமல், வழக்க மாக தாங்கள் கடந்து செல்லும் கல்லாற்றின் குறுக்கே தற்காலிக தொங்கு பாலத்தை அமைத்து அதன் வழி யாக மலையாளப்பட்டிக்கு சென்று வருகின்றனர். அதிலும் கல்லாற்றின் ஓரத்தில் வெள்ளநீர் அதிகமாக செல் லும் இடத்தில் மட்டும் 4அடி நீளமுள்ள மரத்துண்டுகளை கயிறுகளால் நெருக்கமாக வைத்து கட்டி, அந்த பாலத்தை ரோப் கயிறுகளால் இருபக்கக் கரைகளிலும் இழுத்துக்கட்டி அதிக எடையை ஏற்றாமல் ஒவ்வொரு வராக பொறுமையாக நடந்து ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். ஆற்றின் அகலத்தில் 35 சதவீதத்தி ற்கு மட்டுமே தற்காலிக தொங்குபாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆழமாகவுள்ள இடத்தைக் கடப்பதே மக்களின் நோக்கமாக உள்ளது. இந்த தொங்கு பாலம் அப்பகுதி மக்களின் அவசர தேவைக்காக அமைக்கப்பட்டாலும், நிரந்தர தீர்வுகாண மாவட்ட நிர் வாகம் முன்வர வேண்டும் என மலையாளப்பட்டி ஊராட்சி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் தெரிவிக்கையில், மலையாளப்பட்டிக்கும் கொட்டார குன்றுக்கும் இடையே உள்ள மேம்பாலத்தைப் பயன்படுத்திச்செல்ல வேண்டுமென்றால் குறுக்கே உள்ள தனியார் நிலங்களை கடந்துதான் அந்த மேம்பாலத்திற்கே செல்ல வேண்டும். அதில் பிரச்சனை ஏற்படும் என்பதால் உள்ளதால் தும்பப்பெருமாள் கோவிலில் இருந்து மேம்பாலம் வரையுள்ள ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முறையான பாதை வசதி ஏற்படுத்தி தரவேண்டும். அதற்கு அரசு உதவினால் எளிதில் பாலத்திற்கு வந்து சென்றுவர ஏதுவாக இருக்கும் என தும்பபெருமாள்கோவில் பகுதி காட்டுக்கொட்டகை மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Veppandattai taluka Malayalapatti , Malayalapatti, suspension bridge, people
× RELATED சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டு சிறை விதிப்பு