அமைச்சர் சி.வி.கணேசனின் மனைவி மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசனின் துணைவியார் பவானி அம்மாள் திடீரென்று மறைவெய்திய அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை முதல்வர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் பொது வாழ்வில் உற்ற துணையாகவும்- உறுதிமிக்க ஆதரவாளராகவும் விளங்கிய பவானி அம்மாளின் மறைவு பேரிழப்பாகும். தனது ஒவ்வொரு துளி முன்னேற்றத்திலும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்த வாழ்க்கைத் துணைவியாரை இழந்து வாடும் அமைச்சர் கணேசன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் - ஆறுதலையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories: