பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி

புவனேஷ்வர்: பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை நேற்று போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்டு நேற்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் நேற்று பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் (ஏர் வெர்சன்) சோதனை செய்யப்பட்டது. காலை 10.30மணிக்கு சூப்பர்சோனிக் போர் விமானமான சுகோய் 30எம்கேவியில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை செலுத்தி சோதனை செய்து பார்க்கப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழித்துள்ளது. பிரம்மோஸ் சோதனையில் இது ஒரு முக்கிய மைல்கல் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போர் விமானத்தில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Related Stories: