பிபின் ராவத்தின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு: அமித்ஷா இரங்கல்

டெல்லி: பிபின் ராவத்தின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். இந்த துயரமான இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். தாய் நாட்டிற்கு சேவையாற்றிய துணிச்சல் மிக்க வீரர்களில் ஒருவர் பிபின் ராவத் எனவும் கூறினார்.

Related Stories: