டெல்டா வைரசை போன்று ‘ஒமிக்ரான்’ ஆபத்தானது அல்ல: அமெரிக்க விஞ்ஞானி தகவல்

வாஷிங்டன்: டெல்டா வைரசை போன்று தற்போது வேகமாக பரவும் ‘ஒமிக்ரான்’ வைரஸ் ஆபத்தானது அல்ல என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 35க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், அதன் தாக்கம் குறித்து அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் அந்தோணி ஃபவுசி அளித்த பேட்டியில், ‘உருமாற்றமடைந்த கொரோனாவின் டெல்டா வைரசை காட்டிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று ஆபத்தானது அல்ல. தென்னாப்பிரிக்காவின் நிலைமையைப் பார்க்கும்போது, தொற்றுநோய்களின் எண்ணிக்கைக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதம் டெல்டா வைரசை காட்டிலும் குறைவாகவே உள்ளது’ என்றார்.

முன்னதாக மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்களின் பிரிவு தலைவர் பாஹிம் யூனுஸ் கூறுகையில், ‘ஒமிக்ரான் வைரஸ் டெல்டா வைரசை காட்டிலும் ஆபத்தானது அல்ல; ஒமிக்ரான் தொற்று பாதித்த ஒருவர் கூட இன்னும் இறக்கவில்லை. டெல்டா வைரசை போன்று ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவாது என்று நினைக்கிறேன்’ என்றார். அதேநேரம் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துதல் தொடர்பாக அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். அதன்பின் அமைச்சரவை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘ஒமிக்ரான் வைரசின் வடிவம் டெல்டா வடிவமைப்பை போன்றே உள்ளது. தற்போது இங்கிலாந்தில் ஒமிக்ரானால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கிலாந்தில் மட்டும் 437 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

Related Stories: