ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: விஜயகாந்த் அறிக்கை

சென்னை: ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இதுவரை 11 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த பிபின் ராவத் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் இதுபோன்ற விபத்து இதுவரை நிகழ்ந்தது இல்லை, ராணுவ அதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. எனவே விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியப்பட்டு, உரிய விசாரணை நடத்த வேண்டும். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories: