×

புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு...60க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

கிட்டேகா: ஆப்பிரிக்‍க நாடான புரூண்டியில் சிறைக்‍கு வைக்‍கப்பட்ட தீயில் கருகி 38 பேர் உயிரிழந்தனர். புரூண்டி தலைநகர் கிட்டேகாவில் உள்ள சிறையில் வெறும் 400 பேரை மட்டுமே சிறை வைக்‍கமுடியும். ஆனால், அங்கு ஆயிரத்து 539 பேர் அடைக்‍கப்பட்டிருந்தனர். இந்நிலையில், ​அதிகாலை 4 மணிக்‍கு சிறையில் ​திடீரென தீ பற்றி எரிந்தது. இதிலிருந்து தப்பும் விதமாக கைதிகள் அனைவரும் ஒரே வழியில் வெளியேற முயன்றனர். ஆனால் அந்த வழியில் இருந்த கதவுகளைத் திறந்துவிட சிறை காவலர்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து குறித்து தகவல் தெரிந்த சிறிது நேரத்திலேயே சிறை நிர்வாக ஊழியர்கள், செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருப்பினும் அவர்கள் செல்வதற்குள் தீக்‍காயமடைந்த 38 பேர் உயிரிழந்தனர். மேலும் 60க்‍கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்‍கப்பட்டுள்ளனர்.  தீ விபத்தில் சிக்கி 26 கைதிகள் உடல் கருகி இறந்ததாகவும், 12 கைதிகள் தீயினால் எழுந்த புகை மூட்டத்தால் மூச்சு திணறி இறந்ததாகவும் அந்நாட்டின் துணை அதிபர் பிராஸ்பர் பஜோம்பான்ஜா தெரிவித்தார்.

இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து சிறையில் தீ பற்றியதற்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அசம்பாவித சம்பவத்தை தொடர்ந்து மத்திய சிறைச்சாலைக்கு செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.


Tags : Burundi , Burundi, prison, fire, 38 prisoners killed
× RELATED நந்திமங்கலம் கிராமத்தில்...