×

ரகானே, புஜாராவுக்கு டிராவிட், கோஹ்லி ஆதரவால் சிக்கல்: தென்ஆப்ரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த வாரத்தில் இருந்து தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் வரும் 26ம் தேதி செஞ்சூரினில் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் ஜன 3-7 வரை ஜோகன்னஸ்பர்க்கிலும், கடைசி டெஸ்ட் ஜன.11-15ம்தேதி வரை கேப்டவுனிலும் முதல் 2 ஒருநாள் போட்டி முறையே ஜன.19,21ம் தேதி பார்ல், 3வது ஒன்டே 23ம் தேதி கேப்டவுனிலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் வீரர்கள் தேர்வு குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது. மோசமான பார்மில் இருந்தாலும் ரகானே , புஜாரா, இசாந்த் சர்மாவுக்கு கோஹ்லி, டிராவிட் ஆதரவாக உள்ளனர். ஆனால் தேர்வாளர்கள் இளைஞர்களுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் சேத்தன்சர்மா தலைமையில் தேர்வு குழுவினர் அணி தேர்வை ஒத்திவைத்துள்ளனர். தென்ஆப்ரிக்காவில் இந்திய அணி ஒருமுறைகூடடெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆனால் இந்தமுறை அந்த சாதனையை படைக்கும் முனைப்பில் உள்ளது.

இதனால் கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் விருப்பத்தை மனதில் வைத்து, ரகானே மற்றும் புஜாரா இருவருக்கும் கடைசி வாய்ப்பை வழங்க தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இஷாந்தின் தேர்வு அவரது உடற்தகுதியைப் பொறுத்தே அமையும். இன்று அல்லது நாளை அணி தேர்வு இருக்கலாம்.
ரோகித்சர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மும்பையின் ஒருவார கால பயிற்சிக்கு பிறகு இந்திய அணி வரும் 16ம் தேதி தென்ஆப்ரிக்கா புறப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் இப்போது அறிவிக்கப்படாது. விஜய் ஹசாரே டிராபி இன்று தொடங்க உள்ள நிலையில் வீரர்களின் செயல்பாட்டை கண்காணித்து பின்னர் அறிவிக்கப்படும் என  தெரிகிறது. ஏனெனில் ஒருநாள் தொடருக்கு இன்றும் ஒரு மாதத்திற்குமேல் உள்ளது. ஒருநாள்போட்டியில் தவான் சேர்க்கப்படுவார் என கூறப்படுகிறது.

இதனிடையே விராட் கோஹ்லியின் ஒருநாள் கேப்டன் பதவி குறித்து  விவாதம் எழுந்துள்ளது. வெள்ளை பந்து கிரிக்கெட்டிற்கு (ஒன்டே, டி.20) வெவ்வேறு கேப்டன் இருந்தால் தேவையற்ற சிக்கலை உருவாக்கலாம்.  இருப்பினும், பிசிசிஐ கோஹ்லியை அவமரியாதை செய்து அவரது ஒருநாள் கேப்டன் பதவியை பறிக்க விரும்பவில்லை.தானாக முன்வந்து விலகுமாறு அவரை சமாதானப்படுத்த முயற்சிப்பார்கள். அடுத்த ஆண்டில் அதிக ஒருநாள் போட்டிகள் இல்லாததால் தனது 100வது டெஸ்ட்டை ஆடும்  கோஹ்லியிடம் இருந்து ஒருநாள் கேப்டன் பதவியை பறிப்பதுசாத்தியமில்லை.


Tags : Dravid ,Kohli ,Raghane ,Pujara ,Indian ,South African Test , Dravid, Kohli back trouble for Raghane, Pujara: India squad for South Africa Test series announced today
× RELATED ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே...