×

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியதால் 49,000 பேருக்கு எதிர்விளைவுகள்... 946 பேர் உயிரிழப்பு : ஒன்றிய அரசு தகவல்!!

டெல்லி : நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியதால் 49,000 பேருக்கு எதிர்விளைவுகள் ஏற்பட்டதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதன்படி, தடுப்பூசி செலுத்த தொடங்கிய நாள் முதல் கடந்த 30ம் தேதி வரை, நாடு முழுவதும் 123.25 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவர்களில் 49,819 பேருக்கு எதிர் விளைவு ஏற்பட்டதாகவும் 0.4% பேருக்கு மட்டும் எதிர்விளைவு ஏற்பட்டதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.

எதிர் விளைவுஅனைத்தும் தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்டவை என்று கூற முடியாது என்று தெரிவித்துள்ள அரசு, அதேநேரம், மொத்த பாதிப்புகளில் 47 ஆயிரத்து 691 லேசானவை, 163 தீவிரமானவை, ஆயிரத்து 965 மோசமானவை ஆகும் என்று கூறியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு 946 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் 1,019 பேர் தடுப்பூசி செலுத்திய பிறகு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 89 மரணங்களும் எவ்வாறு நிகழ்ந்தவை என பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, 4 மரணங்கள் தடுப்பூசி சார்ந்தவை, 58 தற்செயலானவை, 16 வரையறுக்க முடியாதவை மற்றும் 11 வகைப்படுத்த முடியாதவை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Union Government , Vaccine, Union Department of Health, Ministry
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...