×

நாசாவின் விண்வெளிப் பயணத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அனில் மேனன் தேர்வு

வாஷிங்டன்: நாசாவின் விண்வெளி பயண திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 10 பேரில் இந்திய வம்சாவளியை அனில் மேனன் இடம் பெற்றுள்ளார். நிலவு, செய்வாய் கிரகம், சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவற்றுக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு பணிகளை மேற்கொள்ள அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திட்டமிட்டுள்ளது.

இதற்காக விண்வெளி வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகளுக்காக 12,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் இருந்து 4 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் தேர்வாகியுள்ளனர்.

இந்த 10 பேரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 45 வயதான அனில் மேனனும் ஒருவர் ஆவார். இவர் அமெரிக்க விமான படையில் லேப்டனென்ட் கர்னெலாக பணியாற்றி வருகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நியூரோ பயாலஜியில் இளங்கலை பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இந்திய பொறியியல் முதுகலை பட்டமும் பெற்றவர் அனில் மேனன். நாசாவின் முந்தையை விண்வெளி ஆய்வுகளிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

Tags : Anil Menon ,NASA , NASA
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்