×

மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது வழங்கும் விழாவில் விருதுகள் பெற்ற 6 தமிழக மாற்றுத் திறனாளிகள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு!!

சென்னை : சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது வழங்கும் விழாவில் விருதுகள் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 6 மாற்றுத்திறனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை  சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (8.12.2021) தலைமைச் செயலகத்தில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 3.12.2021 அன்று புதுதில்லியில் ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது வழங்கும் விழாவில், மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் சிறந்த பணியாளர் / சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருது மற்றும் சிறந்த சான்றாளர் / முன்னுதாரண விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 6 மாற்றுத்திறனாளிகள் சந்தித்து, அவ்விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 3.12.2021 அன்று புதுதில்லியில் ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது வழங்கும் விழாவில், பார்வைதிறன் குறைவுடையோர் பிரிவில் சிறந்த பணியாளர் / சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருது பெற்ற திரு.ஏ.எம். வேங்கடகிருஷ்ணன் மற்றும் திரு.எஸ். ஏழுமலை, அறிவுசார் குறைபாடுடையோர் பிரிவில் சிறந்த பணியாளர் / சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருது பெற்ற திரு.கே. தினேஷ், பல்வகை குறைபாடுடையோர் பிரிவில் சிறந்த பணியாளர் / சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருது பெற்ற திரு. மானகஷா தண்டபாணி, பல்வகை குறைபாடுடையோர் பிரிவில் சிறந்த சான்றாளர் / முன்னுதாரண விருது பெற்ற செல்வி கே. ஜோதி மற்றும் திரு. டி. பிரபாகரன் ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் விருதுகளை வழங்கப் பெற்றார்கள்.


Tags : CM ,Stalin ,Alternatives ,National Awarding Ceremony for Transplacers Ownership Ceremony , Transgender, MK Stalin, National Award
× RELATED நாடு காக்க; நாளைய தலைமுறை காக்க;...