கேரளாவில் கனமழை இடுக்கி அணை மீண்டும் திறப்பு: ஒரே ஆண்டில் 6வது முறை

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழையை தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்ததால் இடுக்கி அணை நேற்று காலை மீண்டும் திறக்கப்பட்டது.கேரளாவில்   வடகிழக்கு பருவமழையின் தீவிரம் இன்னும் குறையவில்லை. இதனால் அனைத்து   அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக முல்லை பெரியாறு,   அருவிக்கரை, நெய்யார் உள்பட பெரும்பாலான அணைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில்,   இடுக்கி அணையிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று இரவு அணையின்   நீர்மட்டம் (கடல் மட்டத்தில் இருந்து) 2401 அடியை தாண்டியது. இதன் மொத்த   கொள்ளளவு 2403 அடியாகும். இதையடுத்து, நேற்று காலை 6 மணியளவில்  இடுக்கி அணை  திறக்கப்பட்டது. ஒரு வருடத்தில் இடுக்கி அணை 4வது முறையாக  திறக்கப்படுவது  இதுவே முதல் முறையாகும்.

Related Stories: