முல்லை பெரியாறு அணையை கண்காணிக்க நிரந்தர மேற்பார்வையாளரை நியமிக்க உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

புதுடெல்லி:  முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பிரதான வழக்கின் மனுதாரரான கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப், நேற்று புதி கூடுதல் மனுவை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ‘அணையை திறப்பு குறித்து எந்த திட்டமும் தமிழக அரசிடம் இல்லை. பொறுப்பற்ற முறையில் மதகுகள் திறக்கப்படுகிறது. இதனால், கேரள மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

கடந்த 30ம் தேதி இரவோடு இரவாக முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம், அணையின் கீழ் பகுதியில் கேரள மக்களுக்கு ஏற்படும் விளைவுகளை தமிழக அதிகாரிகள் கருத்தில் கொள்வில்லை. இதை நீதிமன்றம் கருத்தில் கொண்டு, அணையில் அபாயம் இல்லாத அளவுக்கு நீர் மட்டத்தை பராமரிக்கவும், தேக்கவும் உத்தரவிட வேண்டும். இரவு நேரத்தில் திடீரென அணையில் இருந்து நீர் திறக்க தடை விதிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு, நீர் வரத்து ஆகியவற்றை 24 மணி நேரமும் கண்காணிக்க, நிரந்தர மேற்பார்வையாளரை நியமிக்க உத்தரவிட வேண்டும்,’ என கூறியுள்ளார்.

Related Stories: