மதுரா மசூதியை ஒப்படையுங்கள்: உபி. அமைச்சர் சர்ச்சை

பல்லியா: ‘மதுராவில் இருக்கும் வெள்ளை கட்டிடங்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்,’ என்று உத்தர பிரதேச அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் வலியுறுத்தி இருக்கிறார். இவர் அளித்த பேட்டியில், ‘மதுராவில் கிருஷ்ணா ஜென்மபூமி கோயில் அருகே அமைந்திருக்கும் வெள்ளை கட்டமைப்பை இந்துக்களிடம் இஸ்லாமியர்கள் ஒப்படைக்க வேண்டும்.

முன்னாள் ஷியா வக்பு வாரிய தலைவர் ரிஸ்வி, இந்து மதத்துக்கு மாறியது தைரியமான முடிவு. இதை பின்பற்றி மற்ற முஸ்லிம்களும் இந்துவாக மாற வேண்டும். 250 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை அவர்கள் பார்த்தால், அவர்கள் அனைவரும் இந்துவாக இருந்தவர்கள்தான். மதம் மாறி இஸ்லாமியர்கள் ஆகியுள்ளனர்” என்றார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: