விவசாயிகளுக்கு புதிதாக பயிர்க்கடன்: மண்டல இணைப்பதிவாளர் அறிக்கை

காஞ்சிபுரம்: புதிதாக பயிர்க் கடன் தேவைப்படும் விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை அணுகி பயன்பெறலாம் என காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் எஸ்.லட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், தகுதியுள்ள அனை    த்து விவசாய உறுப்பினர்களுக்கும் குறுகிய கால பயிர்க்கடன்கள் வழங்கப்படுகிறது.இதையொட்டி, இந்தாண்டு மாவட்டத்தில் பயிர்க் கடன் வழங்க ஆண்டு குறியீடாக ₹70 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை  6,763 விவசாய உறுப்பினர்களுக்கு ₹43.22 கோடிக்கு பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிதாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது பரவலான மழைப் பொழிவு இருப்பதால், புதிதாக பயிர்க் கடன் தேவைப்படும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி உடனடியாகப் பயிர்க் கடன் பெற்றுக் கொள்ளலாம். எனவே, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் அளித்து உறுப்பினராக சேர்ந்து, பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: