வெளிநாட்டில் இருக்கும்போது பிரியங்கா சோப்ரா பீகாரில் தடுப்பூசி போட்டதாக தகவல்: கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் சஸ்பெண்ட்

பாட்னா: பீகாரில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் பெயர் பட்டியலில் மோடி, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் இருப்பதால், சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.பீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டவர்களின் விபரங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டது.

அதில், தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் பெயர் பட்டியலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நடிகர் அக்‌ஷய் குமார், நடிகை பிரியங்கா சோப்ரா (வெளிநாட்டில் வசிக்கிறார்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விசாரணையில், தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் தினசரி விபரத்தை ‘கோவின்’ போர்ட்டலில் பதிவேற்றம் செய்யும் இரண்டு கணினி ஆபரேட்டர்கள், மேற்கண்ட பிரபலங்களின் பெயர்களை வேண்டுமென்றே பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Related Stories: