நடிக்க வருகிறாரா சச்சின் மகள்?

மும்பை: சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா, சினிமாவில் நடிக்கப்போவதாக பாலிவுட்டில் தகவல் பரவியுள்ளது.கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு சாரா, அர்ஜுன் என மகள், மகன் உள்ளனர். படிப்பை முடித்துவிட்ட சாரா, திடீரென்று இப்போது மாடலிங் துறையில் நுழைந்துள்ளார். அவர் ஆடைகள் விளம்பரம் ஒன்றில் நடிகை பனிடா சந்து மற்றும் மாடல் ஒருவருடன் சேர்ந்து நடித்துள்ளார். இந்த விளம்பர வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சாராவுக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதாகவும், அவர் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சச்சினோ, சாராவோ எதுவும் கூறவில்லை.பாலிவுட்டை சேர்ந்த சிலர் கூறும்போது, ‘சாரா முன்பை விட உடல் மெலிந்து அழகாக தோற்ற மளிக்கிறார். அவர் நடிக்க வந்தால் வரவேற்போம்’ என்றனர்.

Related Stories: